Posts

Showing posts from December, 2015

ஆல் டீச்சர்ஸ் டிஎன் மற்றும் TAMS: இனைந்து வழங்கும் TNPSC, VAO போட்டி தேர்வர்களுக்கு, தினமும் வினாவிடை

THODAKKAKALVI:  ஆல் டீச்சர்ஸ் டிஎன் மற்றும்  TAMS: இனைந்து வழங்கும்  TNPSC, VAO  போட்டி தேர்வர்களுக்கு, தினமும் வினாவிடை தொகுப்பு What's app ல் வழங்க உள்ளது. தங்களின் உறவினர்கள், தேர்வர்கள் என தேவைப்படும் நண்பர்கள் , MS.GK<பெயர்,இடம்> என Type செய்து வாட்ஸ் அப்பில் 9894429770 என்ற எண்ணுக்கு அனுப்பவும். Have a look at it!  www alltrstnsiva blogspot in. மற்றும் www.tamstpt.blogspot.in அன்புடன்:  மு.சிவக்குமார், ப.ஆ ALL TRS TN.. 

செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 200 காலி!

செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 200 காலி! அரசு செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளும், 5 செவிலியர் கல்லூரிகளும் செயல்பட்டு உள்ளன. இவற்றில் சுமார் 2,000 மாணவிகள் பயின்று வருகின்றனர். செவிலியர் பள்ளிகளில்...: 8 பள்ளிகளில் முதல்வர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த நிலையில், அனைத்து கல்லூரிகளிலும் 100 மாணவிகள் என்று சமமாகப் பிரிக்கப்பட்ட நிலையில், 150 ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக நிரப்ப வேண்டிய அவசியம் உள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கல்லூரி ஆசிரியர்கள் சிலர் கூறியது: ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் மூப்பு அடிப்படையில் முதல்வர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர். ஓய்வு பெற்றதும் கல்லூரிகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல், இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் கல்லூரிக்குத் தேவையான தீர்மானங்கள், முடிவுகள் எடுப்பதில் தா

'நெட்' தகுதி தேர்வு நாளை! கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வு,

'நெட்' தகுதி தேர்வு நாளை! கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, நாடு முழுவதும், நாளை நடக்கிறது; தமிழகத்தில், 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையெனில் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். பெரும்பாலானோர், 'நெட்' தேர்வையே எழுதுவர்.ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை இந்த தேர்வு நடக்கும். இந்த ஆண்டுக்கான, இரண்டாவது, 'நெட்' தேர்வு, நாளை நடக்க உள்ளது. நாடு முழுவதும், 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில், 10 லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தேர்வு மையங்களில், 50 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளனர்; மூன்று தாள்களுக்கு விடையளிக்க வேண்டும்.தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை, www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இப்படித் தான் இருக்கும் வினாக்கள் * நுாறு மதிப்பெண் - 60 கேள்விகள் அடங்கிய முதல் தாளுக்கு, 75 நிமிடங்கள் வழங்கப்படும். இதில், 50 கேள்விகளுக்கு மட்டுமே தேர்

விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி 2–ந்தேதி வினியோகம்

விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி 2–ந்தேதி வினியோகம் 1–வது முதல் 9–வது வரை பள்ளிக்கூடங்களில் படிக்கும் 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி மாதம் 2–ந்தேதி வழங்கப்பட உள்ளன.விலை இல்லா பாடப்புத்தகங்கள்தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 1–வது வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை உள்ள 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு முதல் பருவம், 2–வது பருவம், 3–வது பருவம் என்று 3 பருவங்களாக கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த மாணவர்களின் புத்தக சுமை குறைந்து விடுகிறது.மாணவ–மாணவிகளுக்கு 2–வது பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக 33நாட்களுக்கு மேலாக பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் காரணமாக 2–வது பருவத்திற்கு உரிய பாடங்களை ஆசிரியர்களால்நடத்த முடியவில்லை

ஆன்-லைனில்' துறைத்தேர்வு -மத்திய அரசு முடிவு

'ஆன்-லைனில்' துறைத்தேர்வு -மத்திய அரசு முடிவு அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  இந்த தேர்வுகளை மாநில அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் நடத்துகின்றன.மின்னாளுமை திட்டத்தின் மூலம் அனைத்து அரசு துறைகளும் 'ஆன்லைன்' மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பணியாளர் தேர்வாணையங்களும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து வகை தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் 'ஆன்லைனில்' வெளியிடப்படுகின்றன. ஒருசில போட்டித் தேர்வுகளும் 'ஆன்லைனில்' நடத்தப்படுகின்றன.2016 முதல் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகளையும் 'ஆன்லைனில்' நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின் மாநில அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளும் 'ஆன்லைனில்' நடத்தப்படும்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் என்.சி.சி., மாணவர்கள்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் என்.சி.சி., மாணவர்கள். வரும் 2016 பொதுத்தேர்தல் பாதுகாப்பு பணியில் என்.சி.சி., மாணவர்களை ஈடுபடுத்தும் திட்டம் உள்ளது. இதற்காக அவர்கள் குறித்த விபரங்களை தயார் செய்ய போலீசுக்கு தேர்தல் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பாதுகாப்பு, தேர்தல் பணியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை பயன்படுத்துதல் போன்ற சில ஆரம்ப கட்ட பணிகளில் ஆணையம் ஈடுபட்டுள்ளது.  பாதுகாப்பு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்சூழலை தவிர்க்க, பள்ளி, கல்லுாரிகளில் உள்ள என்.சி.சி., மாண வர்களை பயன் படுத்தலாம் என, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.இதற்கான சில தகவல்களை பெற எஸ்.பி., அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்தந்த மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., படை யிலுள்ள மாணவர்கள் எண்ணிக்கை பற்றி போலீசார் கணக்கெடுக்கின்றனர்.போலீசார் கூறுகையில்,“தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்காவல் படையை போன்று, என்.சி.சி., பிரிவு மாணவர்களை பயன்படுத்தலாம். தேர்தல் தேதி நெருங்குவதால் என்.சி.சி., படை குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.தேர்தல் நேரத்தில் ஏற்பாடு செய்ய இய

மதுரை காமராஜ் பல்கலை கல்விப் பேரவை கூட்டம் எப்போது: சிக்கலில் தனியார் கல்லூரிகள்

மதுரை காமராஜ் பல்கலை கல்விப் பேரவை கூட்டம் எப்போது: சிக்கலில் தனியார் கல்லூரிகள் மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்வி பேரவை கூட்டம் நடத்த தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலை அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரிகள், புதிய பாடத் திட்டங்கள் குறித்து முடிவு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணி ஆறு மாதங்களுக்கும் மேலாக நடக்கிறது. இதனால் ஆராய்ச்சி பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், மார்ச்சை அடுத்து நவம்பரில் நடக்க வேண்டிய கல்விப் பேரவைக் கூட்டம் இதுவரை நடக்கவில்லை. துணைவேந்தர் இல்லாத நேரத்தில், 'கன்வீனர் கமிட்டி' தான் கூட்டம் நடத்த முடிவு எடுக்க வேண்டும்.இக்கமிட்டியின் தலைவர் உயர்கல்வி செயலர் என்பதால் அவரது முடிவுக்காக 'கன்வீனர் கமிட்டி' காத்திருக்கிறது. கல்விப் பேரவை தாமதமாவதால் அதை தொடர்ந்து நடக்கும் 'செனட்' கூட்டங்களையும் நடத்த முடியவில்லை. இதனால், அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரிகளின் பாடத் திட்டங்களில் மாற்றம் செய்வது உட்பட பல்வேறு விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன.இது

7,000 பேராசிரியர்களுக்குகல்வி ஊதியம் பாக்கி

7,000 பேராசிரியர்களுக்குகல்வி ஊதியம் பாக்கி அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், கல்வித்தர மேம்பாட்டு ஊதியம், நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், 7,000 பேராசிரியர் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும், 140 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உள்ளன; இவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, சம்பளம் தவிர்த்து, கல்வித்தர ஊதியம் கூடுதலாக வழங்கப்படுகிறது.இவ்வாறு, பேராசிரியர்களுக்கு, மாதம், 6,000 ரூபாய் வழங்கப்படும்.  இவர்கள், பி.எச்டி., முடித்தால், மூன்று ஆண்டுக்கு பின், எம்.பில்., முடித்தால், நான்கு ஆண்டுக்கு பின், மற்றவர்களுக்கு, ஐந்து ஆண்டுக்கு பின், தர மேம்பாட்டு ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 2007ல், அரசு கல்லுாரிகளில், 4,000 பேர், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 3,000 பேர்  பேராசிரியராக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 2011 முதல், மாதம் தோறும், 7,000 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 6,000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரலில், நிலுவை தொகையை வழங்க, உயர் கல்வித்துறை அரசாணை பிறப்பித்தது. ஆனால், அமல

மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பு: மாநில அரசுகளுக்கு தடை: யூ.ஜி.சி., பார்த்து கொள்ளும் :மத்திய அரசு

மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பு: மாநில அரசுகளுக்கு தடை: யூ.ஜி.சி., பார்த்து கொள்ளும் :மத்திய அரசு நிகர் நிலை பல்கலை மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பை, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டாம்; பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., பார்த்து கொள்ளும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.வெளிநாடுகளில் படிக்க செல்லும் அல்லது பணிக்கு செல்லும் மாணவர் சான்றிதழ்களை, சரிபார்க்கும் பணி, மாநில அரசுகளின் அயல்நாடு விவகாரத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், 'நிகர் நிலை பல்கலைகளின் சான்றிதழ், மாநில அரசுகளால் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை. சான்றிதழின் உண்மை தன்மை குறித்த அறிக்கை, தாமதமாக கிடைக்கிறது' என, புகார் எழுந்துள்ளது. இதனால், பல நேரங்களில், போலி சான்றிதழ் வருவதாக வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன.இந்த பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மனித வள மேம்பாட்டு துறையின், உயர் கல்வி மற்றும் இடை நிலை கல்வி பிரிவு தலைமை செயலர், சி.எஸ்.ராஜன் பிறப்பித்த உத்தரவு:நிகர் நிலை பல்கலைகள், யூ.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. அவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதே நேரம், மாணவ

பள்ளிக்கல்வி - மழை பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு விடுமுறையில் இரண்டாம் கட்ட தூய்மை பணிகளை 28/12/2015 முதல் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

: பள்ளிக்கல்வி - மழை பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு விடுமுறையில் இரண்டாம் கட்ட தூய்மை பணிகளை 28/12/2015 முதல் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

6ல் 4 ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின்கல்வி பாதிப்பு!மேல்நிலை பள்ளி சுகாதாரமும் கேள்விக்குறி

6ல் 4 ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின்கல்வி பாதிப்பு!மேல்நிலை பள்ளி சுகாதாரமும் கேள்விக்குறி ஆதிதிராவிடர் நலப் பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட, நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்காததால், சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.பொன்னேரி ரயில் நிலைய சாலையில், 1932ல் துவங்கப்பட்ட, ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 8ம் வகுப்பு வரை, 84மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர், இரு பட்டதாரி ஆசிரியர்கள், மூன்று இளநிலை ஆசிரியர்கள் என, மொத்தம், ஆறு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். கடந்த மார்ச் மாதம், பள்ளியின் தலைமையாசிரியர் பணியிடமாற்றம் பெற்று சென்றார்.அதனால், தலைமை ஆசிரியர் உட்பட நான்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல்காலியாகவே உள்ளன. காலி பணியிடங்களால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, கடந்த, ஜூன் மாதம், நமது நாளிதழில்செய்தி வெளியானது. இதையடுத்து, இரண்டு ஆசிரியர்கள் அந்த பள்ளிக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால், அடுத்த ஒரு மாதத்திலேயே, அவர்கள் வேறு பள்ளிகளுக்கு, இடமாற்ற

இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன

இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்ந்து எடுக்கப்படாததால் 100 சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இந்த ஆண்டு மூடப்பட்டன. தமிழ்நாட்டில் 38 அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 42 அரசு உதவி பெறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. இவை தவிர சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 454 இருந்தன. சமீபத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் 2 ஆயிரத்து 240 பேர் மட்டுமே சேர்ந்தனர். ஆனால் சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. ஏராளமான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. காரணம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி, அதில் அதிக மார்க்கு எடுத்தால்தான் ஆசிரியர் வேலை வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட காரணத்தால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இந்த வருடம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த வருடம் மட்டும் 100

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு 26-12-15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு   26-12-15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி  📚அன்பான வேண்டுகோள்📚 அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே திருப்பத்தூர் ஒன்றியத்தில் உதவி தொடக்க அலுவலர்கள் ஆலோசனையின்படி சில ஆசிரியர்கள் இணைந்து நடைபெற இருக்கும் NMMS தேர்வுக்கு  நாளை 26-12-15 முதல்  31-12-15 வரையில்  VSV நகராட்சி பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 3.30  வரை சிறப்பு பயிற்சி வழங்க உள்ளனர். எனவே இந்த பயிற்சிக்கு திருப்பத்தூர் ஒன்றிய அனைத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தங்களது மாணவர்களை  அழைத்து வந்து பயன்பெற வேண்டுகிறோம். இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைவார்கள் என தெரிகிறது. அன்புடன். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள். செய்தி: ALL TRS TN.. Siva. கல்வி செய்திகளை தெரிந்து கொள்ள இணையுங்கள் www.alltrstnsiva.blogspot.in உடன்:- மு.சிவக்குமார், ப.ஆ. திருப்பத்தூர்.

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு! ..பகுதி.2

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு! ..பகுதி.2 கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் தமிழ்நாடு போலீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது! தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு சிஐடி பிரிவு உருவாக்கப்பட்டது! இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்து 1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும் பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்!  1976 – ஆவடியில் போலீஸ் போக்குவரத்து பணிமனை பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது! சிஐடி பிரிவில் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டது! .1979 - தமிழக கால்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது! இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்தது. 1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும், பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்!  1976 – தமிழக காவல்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது! தமிழக காவல்துறையின் முதலாவது டிஜிபியாக ஸ்ட்ரேஸி நியமிக்கப்பட்டார்! 1981 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டது! 1984 – சிஐடி வனப்பரிவு உருவாக்கப்பட்டது! 1989 - தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துடன் இண

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு! பக

 தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு! தமிழக காவல் துறைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்! இதில் இடம் பெற்றுள்ள சாரம்சங்கள் ஒரு சில நூலகங்களிலும் இணைய வளைதளங்களிலும் எடுத்து ஒன்றாக சேர்க்கப்பட்டவையே இதன் மூலம் நம் தமிழக காவல்துறை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்! தமிழக காவல்துறையின் நீண்டது நெடியது! இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று!  தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது! டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக காவல்துறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குற்றத் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது! இது மட்டுமல்லாது 1076 கிலோமீட்டர் கொண்ட தமிழக கடலோரப் பகுதியின் பாதுகாப்பையும் தமிழக காவல்துறை கவனித்து வருகிறது. வடக்கு மத்தி மேற்கு, தெற்கு என தமிழக காவல்துறை 4 மண்டலங்களாகவும்  பிரிக்கப்பட்டுள்ளது!  ஒவ்வொரு மண்டலமும் ஜஜியின் தலைமையில் இயங்கி வருகிறது! இது தவிர சென்னை சென்னை புறநகர் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 7 மாநகரங்களும் ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது

1-1-2016 முதல் தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடை கட்டுபாடு அமலாக்கபடுகிறது.

1-1-2016  முதல் தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடை கட்டுபாடு அமலாக்கபடுகிறது. உயர் நீதிமன்ற உத்தரவு எண்: WP (MD) NO.20559/2015 1-1-2016  முதல் தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடை கட்டுபாடு அமலாக்கபடுகிறது. ஆண்கள் : வேஷ்டி. பைஜாமா.பேண்ட்.சட்டை. இவற்றை தவிர வேறு உடைகள் அனுமதி இல்லை. பெண்கள் : புடவை. தாவணி. துப்பட்டாவுடன் கூடிய சுடிதார். இவற்றை தவிர வேறு உடைகள் அனுமதி இல்லை. மீறினால் நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். IN ENGLISH:- High court order Number: WP (MD) NO. 20559/2015 With effect from 1-1-2016 Restricted dress code will be implemented in the Hindu temples of Tamilnadu. For Men: Pant. Shirt. Paijama. Dhoti.  For Women: Saree. Half saree. Chudithar with fully covered upper cloth. Apart from above mentioned dress code is strictly prohibited. If found they will be severely dealt with by the police complaint.

கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள்

கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள் 1 . HOME SCHOOL MATHS.NET .       தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று  கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல்முறைகள்,வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது;  2. MATHWAY.COM     கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை  விளக்கத்துடன் தருகிறது இந்த தளம்.  3. WEB MATH.COM  கணித பாடம் தொடர்பான வினாக்கள் , பிரச்சனைகளுக்கு செயல் முறை  விளக்கங்களுடன் பதில் பெற உதவுகிறது.  4. WOLFRAMALPHA.COM   கணித பாடம் மட்டுமல்லாது அறிவியல் பொது அறிவு வினாக்களுக்கும்  விடை பெறலாம் இந்த தளத்தில்.  5 . PEDAGONET.COM  கணித தந்திரோபாயங்களை கற்றுகொள்ள உதவுகிறது இந்த தளம்.  6.FUN MATH   மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித  பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம்.  7. COOL MATH   மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம்.  8. FREE MATH HELP   கணித பாட விளக்கங்கள் மற்றும் செயல் முறை பயிற்சிகளை உள்ளடக்கியது.  9 . MATH .COM   கணித பாட அலகுகள் ரீதியாக விளக்கங்கள் , செயல்முறைகள், ப

TNPSC, VAO போட்டி தேர்வர்களுக்கு, TAMS & ALL TRS TN GRP வழங்கும் தினமும் வினாவிடை தொகுப்பு.

TNPSC, VAO போட்டி தேர்வர்களுக்கு, TAMS & ALL TRS TN GRP வழங்கும்  தினமும் வினாவிடை தொகுப்பு. எனது ஆசிரிய பேரினமே  TNPSC, VAO போட்டி தேர்வர்களுக்கு, TAMS & ALL TRS TN GRP வழங்கும்  தினமும் வினாவிடை தொகுப்பு வழங்க உள்ளது தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், தங்களின் உறவினர்கள்  TNPSC தேர்விற்கு அல்லும், பகலும்  படித்து தேர்வு எழுதி எப்படியாவது வேலை கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களுக்கு  ஓர் அறிய வாய்ப்பு தினமும் வாட்ஸ் அப்பில் TNPSC,VAO போன்ற போட்டி தேர்வுக்கான வினா விடைகள் சேகரித்து தொகுத்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும், ALL TRS TN GRP ம் இணைந்து  வழங்க உள்ளது.  தேவைப்படுவோர்  MS.GK என Type செய்து (9894429770) என்ற எண்ணிற்கு 31-12-15 க்குள் WhatsApp ல்  அனுப்பவும்.  இந்த தகவலை தேவைப்படும் நண்பர்களுக்கு, மாணவர்களுக்கு, தேர்வர்களுக்கு தெரிவியுங்கள்.  1000 அ 2000 பதவிகளுக்கு  5 அ 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க முடியாதா என  மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு நம்மால் முடிந்த சிறு உதவி. அன்புடன்.. ALL TRS TN.. Siva. www.allt

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வலியுறுத்தல் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதர தீர்மானங்கள்: சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், கல்வி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பொருத்தமானத் துறைகளில் மாற்றுப் பணிகளை வழங்க வேண்டும், அரசால் உறுதியளிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ள பல்வேறு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.மாநில சங்க நிர்வாகிகளை அழைத்து தமிழக முதல்வரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும், போராட்டக் காலங்களில் காவல்துறையினரை வைத்து அச்சுறுத்துவதும், தடியடி நடத்துவதும் போன்ற ஜனநாயக விரோதச் செயல்களை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தகவல் பெறும் உரிமை சட்டம் கூடுதல் மாற்றங்கள் செய்து உத்தரவு

RTI : தகவல் பெறும் உரிமை சட்டம் கூடுதல் மாற்றங்கள் செய்து உத்தரவு அரசு அலுவலகங்களில் விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க சில கூடுதல் மாற்றங்களை, அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை ஏற்படுத்தியுள்ளது.தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பதில் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு பொது தகவல் அலுவலர் முறைப்படி பதில் அளிக்க வேண்டும். அதில், விண்ணப்பதாரருக்கு திருப்தி ஏற்படாத பட்சத்தில் மீண்டும், அந்த அலுவலரை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இதில், ஏற்படும் சிரமத்தை தவிர்க்க தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பதில் அளிப்பதில் கூடுதல் மாற்றங்களை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தகவல் பெறும் உரிமை சட்டப்படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கும் பதிலில் விண்ணப்ப எண்,பெறப்பட்ட தேதி,தகவல்தரும் அலுவலர் பதவி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி வழங்க வேண்டும். விண்ணப்பதாரர் கேட்ட தகவலை தெரிவிக்க முடியாது என்றால் அதற்குரிய காரணத்தை குறிப்பிடவேண்டும். இதே விண்ணப்பத்தை மற்றொரு தகவல் தரும் அதிகாரிக்கு மாற்றினால், அதன் விபரத்தையும் விண

டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்

டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும் குரூப்-1 தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி. மூலம்தேர்வுகள் நடத்தி நிரப்பப்படுகிறது. குரூப் 1 உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடங்களுக்கு பல கட்ட தேர்வுகள் நடத்தி, இறுதியில் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடம் நிரப்பப்படும். ஆனால், இந்த தேர்வு நடைமுறைகளை நடத்தி முடிக்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு கணக்கில் காலம் எடுத்துக் கொள்கிறது. உதாரணத்துக்கு, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் ஒன்றரை ஆண்டு கழித்து தேர்வாணையம் வெளியிட்டது. பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் தேர்வு முடிவுகளை கூட, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 45 நாட்களில் வெளியிடுகிறது. டி.என்பிஎஸ்சியில் தேர்வு பணிகளை முடித்து விரைவில் முடிவுகளை வெளியிடுவதற்காக ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை திருத்தும் இயந்திரங்கள் பலகோடி ரூபாய் செலவில் வாங்க

பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்கள் நியமிக்க உத்தரவு

பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்கள் நியமிக்க உத்தரவு அரசு பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசுஉத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாத தால் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதாக புகார் எழுகிறது.  இதை தடுக்கும் விதமாக ஊராட்சி ஒன்றிய, அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஊரகவளர்ச்சித்துறைஉத்தரவிட்டுள்ளது.ஊராட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி தலைமைஆசிரியர்கள் கண்காணிப்பில் துப்புரவு பணியாளர்கள் செயல்படுவர்.  ஊராட்சி நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படும்.ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்கப்பள்ளி துப்புரவுபணியாளருக்கு ரூ.750 மற்றும் துடைப்பம், பிளீச்சிங் பவுடர், இதரசெலவுகளுக்கு ரூ.300 வழங்கப்படும்.நடுநிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ. ௧,௦௦௦, இதர செலவுக்கு ரூ.500 வழங்கப்படும். உயர்நிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.1,500, இதர செலவுக்கு ரூ.750, மேல்நிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.2,௦௦௦, இதர செலவுக்கு ரூ.௧,௦௦௦ வழங்கப்படும்.

CPS பணத்தை நீதிமன்றம் சென்று போராடி பெற வேண்டிய அவலம்

CPS பணத்தை நீதிமன்றம் சென்று போராடி பெற வேண்டிய அவலம் நாம் சேர்த்த பணத்தை வாங்க நீதிமன்றம் சென்று போராடி பெற வேண்டிய அவலம் CPS ல் உள்ளவர்களுக்கு!!! திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை திருமதி.  சுந்தரேஸ்வரி அவர்கள்  CPS ல் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் 2010ஆம் ஆண்டு  சாலைவிபத்தில் மரணம் அடைந்தார். ஓய்வூதியம் கேட்டு அவரது கணவர் முனியாண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன் 2 மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் 29–ந் தேதி வரை நீட்டிப்புஅரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் 29–ந் தேதி வரை நீட்டிப்புஅரசு தேர்வுகள் துறை அறிவிப்பு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் 29–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை கோவை மண்டல துணை இயக்குனர் கா.திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:– எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவ–மாணவிகளுக்கான பொதுத்தேர்வு வருகிற 2016–ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதன்படி பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்காக தனியாக சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி கடந்த11–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.இதன்படி கோவை கல்வி மாவட்டத்தில் அசோகபுரம் ஆண்கள் பள்ளி, ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ள

இரண்டாம் பருவ தேர்வு கால அட்டவணை

இரண்டாம் பருவ தேர்வு கால அட்டவணை ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்தேர்வு ஜனவரி, 11 முதல், ஜனவரி, 27ம் தேதி வரை நடக்கிறது. போகி பண்டிகை தினமான ஜனவரி, 14ம் தேதி, 6, 7ம் வகுப்புகளுக்கும் ஆங்கிலத்தேர்வு நடக்கிறது. கன மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு ஜனவரி, 11 முதல், 23 ம் தேதி வரை நடத்த, பள்ளிக்கல்வித்துறை அட்டவணை வெளியிட்டது. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்புகளுக்கும், அந்தந்த மாவட்டங்களே, நடத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. சேலம் மாவட்டத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான, இரண்டாம் பருவத்தேர்வு, ஜனவரி, 11ம் தேதி துவங்கி, ஜனவரி, 27ம் தேதி முடிவடைகிறது. போகி பண்டிகை தினமான, ஜனவரி, 14ம் தேதி, ஆறு மற்றும், ஏழாம் வகுப்புகளுக்கும் ஆங்கில தேர்வு நடக்கிறது. ஏற்கனவே, பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியில் இருந்தனர். தற்போது, ஆறு, ஏழு வகுப்புகளுக்கும், தேர்வு நடத்துவதால், நடுநிலைப்பள்ளிகளும் அன்று விடுமுறை அளிக்க முடியாத சூழல் உரு

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்க

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்க ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும். காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும். இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர். 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு ப

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை - ஊதிய வழக்கு

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை - ஊதிய வழக்கு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை - ஊதிய வழக்கு - உச்ச நீதிமன்றம் - அனைத்து ஊதிய பிரச்சனை சார்பான வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவு

பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1 வரை தொடர் விடுமுறை: பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு

பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1 வரை தொடர் விடுமுறை: பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு பள்ளிகளுக்கு டிசம்பர் 24 (வியாழன்) முதல் ஜனவரி 1-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 மற்றும் எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். வழக்கமாக டிசம்பர் 3-வது வாரத்தில் 10 நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுவது வழக்கம். இதில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தின விடுமுறைகளும் அடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறுவதாக இருந்த அரையாண்டுத்தேர்வுகள் மழை வெள்ளப் பாதிப்பை கருத்தில்கொண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஜனவரி 11 முதல் 27-ந் தேதி நடைபெறும் என்றும் மற்ற வகுப்புகளுக்கு ஜனவரி 11-ந் தேதி தேர்வுகள் தொடங்கும் என்று ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்படுவதால் இந்த ஆண்டு அதற்குரிய விடுமுறை இருக்குமா? இருக்காதா? என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதுகுற

இந்திய ரயில்வேயில் 18252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

இந்திய ரயில்வேயில் 18252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. இந்திய ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 18252 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Indicative advt..03/2015 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Commercial Apprentice காலியிடங்கள்: 703 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 பணி: Traffic Apprentice சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 சம்பளம்: மாதம் ரூ. பணி: Enquiry-Cum- Reservation-Clerk காலியிடங்கள்: 127 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Goods Guard காலியிடங்கள்: 7591 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Junior Accounts Assistant-Cum-Typist காலியிடங்கள்: 1205 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Senior Clerk-Cum-Typist காலியிடங்கள்: 869 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊத

வங்கிகளில் 8887 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வங்கிகளில் 8887 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 8887 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு வங்கியும் அதிகாரபூர்வ இணையதளத்தின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்ற முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ளவும். 1. கனரா வங்கியில் பணி காலியிடங்கள்: 88 கடைசி தேதி: 12.01.2016 விவரங்களுக்கு http://www.canarabank.com/Upload/English/Content/RP-3-2015-%20Splst%20officers-%20English-Web.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். 2. சிண்டிகேட் வங்கியில் பணி காலியிடங்கள்: 600 கடைசி தேதி: 31.12.2015 விவரங்களுக்கு http://www.syndicatebank.in/RecruitmentFiles/PGDBF_ADVERTISEMENT_2016-17-15122015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். 3. பஞ்சாப் நேஷல் வங்கியில் பணி காலியிடங்கள்: 67 கடைசி தேதி: 24.12.2015 விவரங்களுக்கு https://www.pnbindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும். 4. இந்திய சிறு தொழில் அபிவிருத்தி வங்கியில் பணி காலியிடங்கள்: 100 கடைசி தேதி: 12.01.2016 விவரங

திருப்பதூரில் ஓர் ஆசிரியர் இல்லம் - விரைவில் ஜாக்டோ முடிவு

TPT JACTO செய்தி:- 17.12.15 அன்று நடைபெற்ற திருப்பத்தூர் Jactto கூட்டத்தில் நமது பகுதியில் அனைத்து ஆசிரியர்களுக்கு (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி) அதாவது JACTO TPT என்ற குடையின் கீழ் ஒருங்கிணைந்து  வரும் காலங்களில் தொடர்ந்து ஒன்றுபட்டு செயல்படுவது எனவும், மேலும் வேலூரில் ஆசிரியர் இல்லம் இருப்பதுபோல் திருப்பதூரில் ஓர் ஆசிரியர் இல்லம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருடைய மனதிலும் உருவானது. இந்த முயற்சி வெற்றி பெரும் விதமாக நாளை 23-12-2015 (புதன்) மாலை 5.00 அளவில் VSV நகராட்சி பள்ளியில் JACTTO கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து சங்க பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  அன்புடன்.  மு.சிவக்குமார். ப.ஆ. ஜாக்டோ திருப்பத்தூர். மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்.

CPS: இன்று -ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் எதிர்கால வாழ்வை ஒழித்து கட்டிய நாள்...நம் ஓய்வூதிய உரிமையை இழந்த நாள்!!!

CPS: இன்று -ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் எதிர்கால வாழ்வை ஒழித்து கட்டிய நாள்...நம் ஓய்வூதிய உரிமையை இழந்த நாள்!!! ICF ல் கடந்த ஆகஸ்டு 2014 அன்று ஓய்வு பெற்ற திரு.நடராஜன் என்பவர் NPS திட்டத்தில் பெரும் ஓய்வூதியம் வெறும் ரூ. 820/- மட்டுமே. ஆனால் இதுவே இவர் பழைய பென்ஷன் திட்டத்தில் ஓய்வுபெற்றிருந்தால்இவரது ஓய்வூதியம் சுமார் ரூ 12500/- இது மேலும் DA மற்றும் ஊதியக்குழுபரிந்துரைகளின் அடிப்படையில் தொடர்ந்து உயரும் ஆனால் NPS திட்டத்தில் இது போ‌ன்ற எந்த ஒரு உயர்வுக்கும் வாய்ப்பு கிடையாது. சிந்தியுங்கள் தோழர்களே. அனாதைகளுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் மாதம் ரூ. 1000.குறைந்தபட்சம் 9 மாதம் MP ஆக இருந்தாலே மாதமாதம் ரூ.20000 ஓய்வூதியம். ஒரு நாள் MLA வாக இருந்தாலும் மாதாமாதம் ரூ.12,000 ஓய்வூதியம்.ஆனால், CPS ல் உள்ளவர்களுக்கு கட்டிய பணத்தை பெறுவதற்கு உயர்நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை. CPS/NPS கருப்பு தினம்: 22.12.2003 ஆம் தேதியில் தான் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்காலத்தினை காவு வாங்கிய புதிய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த நாளினை பல முற்போக்கு இ