மதுரை காமராஜ் பல்கலை கல்விப் பேரவை கூட்டம் எப்போது: சிக்கலில் தனியார் கல்லூரிகள்

மதுரை காமராஜ் பல்கலை கல்விப் பேரவை கூட்டம் எப்போது: சிக்கலில் தனியார் கல்லூரிகள்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்வி பேரவை கூட்டம் நடத்த தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலை அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரிகள், புதிய பாடத் திட்டங்கள் குறித்து முடிவு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணி ஆறு மாதங்களுக்கும் மேலாக நடக்கிறது. இதனால் ஆராய்ச்சி பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் முடங்கிக் கிடக்கின்றன.
இந்நிலையில், மார்ச்சை அடுத்து நவம்பரில் நடக்க வேண்டிய கல்விப் பேரவைக் கூட்டம் இதுவரை நடக்கவில்லை. துணைவேந்தர் இல்லாத நேரத்தில், 'கன்வீனர் கமிட்டி' தான் கூட்டம் நடத்த முடிவு எடுக்க வேண்டும்.இக்கமிட்டியின் தலைவர் உயர்கல்வி செயலர் என்பதால் அவரது முடிவுக்காக 'கன்வீனர் கமிட்டி' காத்திருக்கிறது. கல்விப் பேரவை தாமதமாவதால் அதை தொடர்ந்து நடக்கும் 'செனட்' கூட்டங்களையும் நடத்த முடியவில்லை. இதனால், அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரிகளின் பாடத் திட்டங்களில் மாற்றம் செய்வது உட்பட பல்வேறு விண்ணப்பங்கள் கிடப்பில்
உள்ளன.இதுகுறித்து கல்லுாரி முதல்வர்கள் சிலர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் நவம்பரில் இக்கூட்டம் நடக்க வேண்டும். கல்வி வளர்ச்சி தொடர்பான முக்கிய முடிவுகளுக்கு இக்கூட்டத்தில் தான் அனுமதி பெற முடியும். இப்பல்கலை அங்கீகாரம் பெற்ற 68க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் புதிய பாடத் திட்டங்கள் சேர்ப்பு, பழைய பாடத் திட்டங்களில் மாற்றம் போன்ற முக்கிய முடிவுகளுக்கு கல்விப் பேரவை மற்றும் அதை அடுத்து நடத்தப்படும் செனட் கூட்டங்களில் தான் ஒப்புதல் அளிக்கப்படும். இதுதொடர்பாக கல்லுாரிகளின் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது ஆறு மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விரைவில் கல்விப் பேரவைக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்