ஆன்-லைனில்' துறைத்தேர்வு -மத்திய அரசு முடிவு

'ஆன்-லைனில்' துறைத்தேர்வு -மத்திய அரசு முடிவு
அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 


இந்த தேர்வுகளை மாநில அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் நடத்துகின்றன.மின்னாளுமை திட்டத்தின் மூலம் அனைத்து அரசு துறைகளும் 'ஆன்லைன்' மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பணியாளர் தேர்வாணையங்களும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து வகை தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் 'ஆன்லைனில்' வெளியிடப்படுகின்றன. ஒருசில போட்டித் தேர்வுகளும் 'ஆன்லைனில்' நடத்தப்படுகின்றன.2016 முதல் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகளையும் 'ஆன்லைனில்' நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின் மாநில அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளும் 'ஆன்லைனில்' நடத்தப்படும்.

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்