7,000 பேராசிரியர்களுக்குகல்வி ஊதியம் பாக்கி

7,000 பேராசிரியர்களுக்குகல்வி ஊதியம் பாக்கி
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், கல்வித்தர மேம்பாட்டு ஊதியம், நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், 7,000 பேராசிரியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும், 140 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உள்ளன; இவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, சம்பளம் தவிர்த்து, கல்வித்தர ஊதியம் கூடுதலாக வழங்கப்படுகிறது.இவ்வாறு, பேராசிரியர்களுக்கு, மாதம், 6,000 ரூபாய் வழங்கப்படும். 

இவர்கள், பி.எச்டி., முடித்தால், மூன்று ஆண்டுக்கு பின், எம்.பில்., முடித்தால், நான்கு ஆண்டுக்கு பின், மற்றவர்களுக்கு, ஐந்து ஆண்டுக்கு பின், தர மேம்பாட்டு ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 2007ல், அரசு கல்லுாரிகளில், 4,000 பேர், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 3,000 பேர் 
பேராசிரியராக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 2011 முதல், மாதம் தோறும், 7,000 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 6,000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது.
கடந்த ஏப்ரலில், நிலுவை தொகையை வழங்க, உயர் கல்வித்துறை அரசாணை பிறப்பித்தது. ஆனால், அமலுக்கு வரவில்லை. அரசு கல்லுாரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் சிவராமன், ''4 ஆண்டுகளாக ஊதியம் பாக்கி உள்ளதால், பேராசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்,'' என்றார்.

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்