தமிழ்நாடு ஆசிரியர் முன்னூற்ற சங்கம், வரலாற்று சிறப்பு ஆணை 243 வழங்கியமைக்கு நன்றி அறிவிப்பு மாநாடு


                  திருப்பத்தூர் மாவட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கூட்டம்

      நன்றி அறிவிப்பு மாநாடு கோரிக்கை 8 மாநாடு அனைவரும் வாரீர்!


திருப்பத்தூர், ஐன-3

      திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு மற்றும் சென்னையில் நடைபெற உள்ள நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு ஆயத்தப்படுத்தும் விதமாகவும் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் மு. சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட பொருளாளர் எம்.சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

            தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அவர்களுக்குத் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான மூதூரிமை அறிவிக்கப்பட்டுள்ளது. மணி முதல் நடைபெறுகிறது.

          நன்றி அறிவிப்பு மாநாட்டின் முதல் நிகழ்வாக "கல்வியில் கலைஞர்" என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவும், கவிதை நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் சுமார் 300 பேர் கலந்து கொள்வது என இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

       மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ள கோரிக்கைகளான புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். Go243 பதவி உயர்வுக்கு தகுதியுள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இல்லாத பட்சத்தில் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி பதவி உயர்வு பெறும் வகையில் ஆணையை திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தல், 2004 முதல் 2006 வரையிலான தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக மாற்றுதல், பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு, சரண்டர் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை உள்ளதுபோல் கல்வி துறையில் பள்ளி துணை ஆய்வாளர் உருவாக்குதல், ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநாடு நடைபெறுகிறது.

    மாவட்ட செயற்குழு மற்றும் நன்றி அறிவிப்பு மாநாடு ஆயத்த கூட்டத்தில் பொறுப்பாளர்கள் எம்.ஸ்ரீதரன், எம்.கிருஷ்ணன், வி.ஆர்.சண்முகம், எம்.மாதவன் புருஷோத்தமன், எம்.செல்வகுமார், எஸ்.செந்தில்குமார், பி.சுப்பிரமணி உள்ளிட்ட மாநில மாவட்ட ,ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோரிக்கையை வென்றெடுக்கும் மாநாடாக மாற்றுவோம். அனைத்து ஆசிரிய பேரினமே அலைகடலென திரண்டு வாரீர்!

அன்புடன்

*மு.சிவக்குமார்* மாவட்டத் தலைவர் 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருப்பத்தூர் மாவட்டம்


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்