விபத்து காப்பீட்டு திட்டம் - ரூ.399-ல் ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம்! - அஞ்சல்துறை அறிவிப்பு!

 விபத்து காப்பீட்டு திட்டம் - ரூ.399-ல் ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம்! - அஞ்சல்துறை அறிவிப்பு!



இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தை டாடா ஏஜஜி ஜெனரல் இன்ஷூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ், ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா போஸ்டல் பேமெண்ட்ஸ் வங்கி செயல்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தில் இணைய அஞ்சலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போனில் விரல் ரேகை பதிந்து 5 நிமிடங்களிலேயே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். விபத்து காப்பீட்டுத் திட்டத்தில், 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இணையலாம்.

ஆண்டிற்கு ரூ.399 அல்லது ரூ.396 பிரீமியம் செலுத்தி ரூ. 10 லட்சம் கவரேஜ் பெறலாம்

இந்த காப்பீடு திட்டத்தில்...

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் அல்லது பக்கவாதம் ஆகியவைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு வழங்கப்படும்.

விபத்தினால் ஏற்படும் உள்நோயாளி மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60,000 வரையிலும், புறநோயாளி மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30,000 வரையிலும் வழங்கப்படும்.

விபத்தினால் மரணம், ஊனம் அல்லது பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000 வரை வழங்கப்படும்.

விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாள்களுக்கு, தினப்படி தொகையாக ஒரு நாளைக்கு ரூ.1000 என 9 நாட்களுக்கு வழங்கப்படும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினருக்கு பயண செலவாக அதிகபட்சம் ரூ.25,000 வரை வழங்கப்படும்.

விபத்தினால் உயிரிழந்தவருக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.5000 வரை வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

தகவல். மு.சிவக்குமார். ப.ஆ

TAMS Tirupattur.

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்