Posts

Showing posts from March, 2023

ஆசிரியருக்கு ஏன் தேவை பணிப் பாதுகாப்புச் சட்டம்? கட்டுரை

 ஆசிரியருக்கு ஏன் தேவை பணிப் பாதுகாப்புச் சட்டம்? தாய் தந்தைக்குப் பிறகும் கடவுளுக்கு முன்பும் போற்றப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் ஆவர். ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு இரண்டாவது ஆசிரியராகவும் அதுபோல் ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளிப் பிள்ளைகளுக்கு இரண்டாவது பெற்றோராகத் திகழ வேண்டும் என்பது சமுதாயத்தின் எதிர்பார்ப்பாகும். ஒருவர் தம் வாழ்வில் எப்போதும் தாம் ஒரு நல்ல மாணவராகவே விளங்க வேண்டும் என்பதையே தம் குறிக்கோளாகக் கொண்டு முன்னேற்றம் கண்டவர்கள் பலர் என்பது கண்கூடு. ஆசிரியர் வேலை என்பது தொழில் அல்ல. அஃதொரு பணியாகும். ஒரு நல்ல ஆசிரியர் வெறும் கூலிக்கு மாரடிக்க ஒருபோதும் விரும்ப மாட்டார். அதுபோல், தம் நல்ல அறிவுஞானம் முழுவதையும் அணுவளவும் விடுபடாமல் ஒவ்வொரு குழந்தைக்கும் எப்பாடுபட்டேனும் தம் கற்பித்தல் வழியாகக் கடத்திவிட ஒவ்வொரு நாளும் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றார். விதை நெல்லுக்கு ஆகும் செலவை யாரும் கணக்குப் பார்க்க மாட்டார்கள். ஆசிரியர் பணியும் அத்தகையது. ஆசிரியர் பணியில் காணப்படும் ஊதிய முரண்பாடுகளும் குறைபாடுகளும் ஏராளம் இருப்பினும் அதனூடாக நிகழ்த்தப்படும் ஆசிரியர் விரோத போக்குக

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்.

Image
 *தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல். ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ *தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று சென்னை தியாகராய நகரில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கு.தியாகராஜன் காமராஜ், இராமு அவர்கள் தலைமையில் நடைபெற்றது ...*  இதில் ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ *மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.* ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ *மத்திய அமைச்சரவை 4 % அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 01.01.2023 முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.*   ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ *மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.* ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ *இடைநிலை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் மற்றும் அனைத்து வகை ஆசிரியரின் ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்.* ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ *சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை விரைவாக பெற்று நடவடிக்கை மேற்கொ

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்று ரேஷன் கார்டும் மிக மிக முக்கியமான ஆவணமாகும். அதை அப்டேட் செய்வது அவசியம். தெரிந்துகொள்ளுங்கள்

Image
 Siva Tam's Tpt ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்று ரேஷன் கார்டும் மிக மிக முக்கியமான ஆவணமாகும். அதை அப்டேட் செய்வது அவசியம். தெரிந்துகொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக அரசு தரும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். வீட்டு முகவரி ஆவணமாக பல இடங்களில் ரேஷன் கார்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இப்படியொரு முக்கியமான ஆவணத்தை அப்டேட்டுடன் வைத்திருப்பது மிக மிக அவசியம். அதாவது வீட்டு முகவரி, வயது விவரம், பிழை இல்லாமல் பெயர், பெயரை சேர்த்தல் அல்லது நீக்குதல் என எல்லா அப்டேட்டுக்களையும் தெளிவாக செய்து இருக்க வேண்டும். அதிலும் புதியதாக திருமணம் ஆனவர்கள் புதிய குடும்ப உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் , அதே போல் குழந்தைகளின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். புதியதாக திருமணம் ஆனவர்கள் உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும். அல

Tams - ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் எனவும், சங்க ஐம்பெரும் விழா ஒப்புதல் பெறவும் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் உணவு துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து கோரிக்கைகளை வழங்கப்பட்ட நிகழ்வு.

Image
  *இன்று.. 27-03-23 ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நடத்த உள்ள ஐம்பெரும் விழாவிற்கான ஒப்புதலையும் தேதியினையும்  பெறவும் சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  அவர்களை நேரில் சந்தித்தோம். அனைத்தையும் கனிவோடு பரிசீலித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார் நன்றி. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾  கு.தியாகராஜன் மாநிலத் தலைவர்  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜாக்டோ ஜியோ* தகவல். சிவக்குமார். ப.ஆ

Tams திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் சங்க வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து கூட்டம் - 25-03-2023.

Image
திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் சங்க வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து கூட்டம் - 25-03-2023. 🤝🏾🤝🏾🙏🏾🙏🏾🤝🏾🤝🏾 நேற்று * 25-03-2023 , சனிக்கிழமை மாலை 4.30* அன்று திருப்பத்தூர் *அரசு உயர்நிலைப் பள்ளியில்* நமது சங்கத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து *மாவட்டகுழு & செயல்பாடுகள்* ஆலோசனை. இக்கூட்டத்தில் பல்வேறு *தீர்மானங்கள் மற்றும் சங்க செயல்பாடுகள்* குறித்து விவாதிக்கப்பட்டு *மாநில தலைமைக்கு* பரிந்துரை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிய *அனைத்து பொறுப்பாளர்கள்* அனைவருக்கும் ஒன்றிய, மாவட்ட அமைப்பின் சார்பில் நன்றி!! நன்றி!! நன்றி!!! 🙏🏾🙏🏾🤝🏾🤝🏾🤝🏾🙏🏾🙏🏾 கடந்த காலங்களில் சரி, இப்பவும் சரி, சங்கம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சற்று தோய்வு நிலையில் உள்ளதை மெருகேற்றனும். நம்ம பிரச்சனைகளுக்காவது நாம் ஒன்றினைந்தால் தான் நம்மால் தீர்க்க முடியும். TAMS சொந்தங்களே!! ஒன்றினைவோம்!வெற்றிபெறுவோம்!! நம்மால் முடியாது வேறு யாராலும் முடியாது! வேறு யாராலும் முடியாது நம்மால் முடியும்!! சங்கத்தின் செயல்பாடுகள் அடுத்தகட்ட நகர்வுகளை நோ

அனைத்துப் பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் உள்ள கனிணி மூலம் எளிமையாக ஒவ்வொரு ஆண்டும் CENSUS REGISTER (மக்கள் தொகைக் கணக்கீட்டுப் பதிவேடு) எளிமையாக தயார் செய்ய SUPER XL SOFTWARE*

 மு. சிவக்குமார், டாம்ஸ் *சென்சஸ் சாப்ட்வேர்- 2023-24 -(பதிப்பு-7)* @ *அனைத்துப் பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் உள்ள கனிணி மூலம் எளிமையாக ஒவ்வொரு ஆண்டும் CENSUS REGISTER (மக்கள் தொகைக் கணக்கீட்டுப் பதிவேடு) எளிமையாக தயார் செய்ய SUPER XL SOFTWARE* @ *5+ மாணவர்கள் பட்டியல்* @ *HABITATION WISE SENSUS*        *REPORT* @ *OVER ALL ABSTRACT* @ *HABITATION WISE EER REPORT* @ *FILLER செய்து பார்க்கும் வசதி* போன்ற அனைத்து விபரங்களையும் *AUTO CALCULATION* மூலம் கணக்கிடப்பட்டு PDF வடிவில் பிரிண்ட் எடுக்கப்பட்டது * 2023-24 ஆம் ஆண்டு ஆண்டிற்கான CENSUS பதிவேடு எளிதாக தயார் செய்து கொள்ளலாம்* குறிப்பு:ஒரு முறை மட்டும் டைப் செய்தால் போதுமானது. 🚫 *_Software Download link வீடியோவிற்கு கீழே விளக்கம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது._* பயன்படுத்தும் வழிமுறை அறிய👇👇👇 https://youtu.be/1HRx9StVuMg *பிற ஆசிரியர் குழுக்களிலும் பகிருங்கள் நன்றி*🙏 அன்புடன் *மு.சிவக்குமார், ப.ஆ* மாவட்ட (அ) செயலாளர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர் மாவட்டம்.

விபத்தால் மாணவர்கள் இறந்தால் அல்லது அவர்களது பெற்றோர்கள் இறந்தால் நிவாரணத்தொகை வழங்கும் திட்டத்தின் அரசாணை மற்றும் விண்ணப்ப படிவம்

 மு.சிவக்குமார், ப.ஆ விபத்தால் மாணவர்கள் இறந்தால் அல்லது அவர்களது பெற்றோர்கள் இறந்தால் நிவாரணத்தொகை வழங்கும் திட்டத்தின் அரசாணை மற்றும் விண்ணப்ப படிவம் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திலும் பங்கேற்கும் தமிழக அரசின் அசத்தல் அரசாணைகள்... 127/2005 , 17/2018 .... தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாழ்வாதாரத்திலும் பங்கெடுத்து அவர்களுக்கு  நிதி உதவி செய்து மாணவர்கள் குடும்பத்தில் பெற்றோர் சாலை விபத்தில் இருந்தாலோ அல்லது மாணவர்கள் சாலை விபத்தில் இருந்தாலோ அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 75000 மற்றும் ஒரு லட்சம் என நிதி உதவி செய்து அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவும் தமிழக அரசு பங்கெடுத்து வருகிறது.  கடந்த 2005ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டு முதல் நடைமுறையில்  இருந்து வரும் இந்த இரண்டு  நிதி உதவி திட்டங்கள் மற்றும் . (தமிழக  அரசாணைகள் 39, 127/2005 மற்றும் 17 /2018 தான் )இதன் சிறப்பம்சங்கள் என்ன என பார்ப்போம். தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்தில் உள்ள அரசு,அரசு உதவிபெறும் பள்ள

விபத்து காப்பீட்டு திட்டம் - ரூ.399-ல் ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம்! - அஞ்சல்துறை அறிவிப்பு!

Image
 விபத்து காப்பீட்டு திட்டம் - ரூ.399-ல் ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம்! - அஞ்சல்துறை அறிவிப்பு! இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தை டாடா ஏஜஜி ஜெனரல் இன்ஷூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ், ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா போஸ்டல் பேமெண்ட்ஸ் வங்கி செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் இணைய அஞ்சலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போனில் விரல் ரேகை பதிந்து 5 நிமிடங்களிலேயே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். விபத்து காப்பீட்டுத் திட்டத்தில், 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இணையலாம். ஆண்டிற்கு ரூ.399 அல்லது ரூ.396 பிரீமியம் செலுத்தி ரூ. 10 லட்சம் கவரேஜ் பெறலாம் இந்த காப்பீடு திட்டத்தில்... விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் அல்லது பக்கவாதம் ஆகியவைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு வழங்கப்படும். விபத்தினால் ஏற்படும் உள்நோயாளி மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60,000 வரையிலும், புறநோயாளி மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30,000 வரையிலும் வழங்கப்படும். விபத்தினால் மரணம், ஊனம்

திருப்பத்தூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் போராட்டம். 05-03-23, தாலுக்கா அலுவலகம்.

Image
 திருப்பத்தூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் போராட்டம். https://www.dailythanthi.com/News/State/fasting-on-behalf-of-jacto-jeo-912772 ஆசிரியர் மாநில அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ ஜியோ முடிவின்படி பல கட்ட போராட்டங்கள் நடந்து முடிந்த நிலையில் இன்று 5-03-23 ​​மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் தாலுக்கா அலுவலம் எதிரில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் பல ஆண்டு கோரிக்கையான சிபிஎஸ் ஒழிப்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் ஊதிய முரண்பாடுகளை கலைத்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், சரண்டர், ஊக்க ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ,   திரு. மு.சிவக்குமார், திரு.நல்.ஞானசேகர்,    வி .மேகநாதன் , திரு. எம்.சிவலிங்கம் , அருள்மொழிவர்மன், ஆகியோர் தலைமை தாங்கினார். போராட்டத் தொடக்க உரை திரு. இலா.தியோடர் ராபின்சன், மற்றும் நிறைவு உரை திரு. சி.ஜெயக்குமார்

வங்கிகளால் அலையவிடபடுகிறீர்களா? கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு உதவுவதற்காகவே RBI இருக்கிறது. நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணையம் வழியாக மிக எளிதாக RBI யை அணுகலாம் !

வங்கிகளால்  அலையவிடபடுகிறீர்களா? கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு உதவுவதற்காகவே RBI இருக்கிறது.                      நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணையம் வழியாக மிக எளிதாக RBI யை அணுகலாம் !                        வங்கிக்கு அலைந்து தீர்வு கிடைக்காத நிலையில் RBI யை தொடர்பு கொண்டு மிக எளிதாக எனது கோரிக்கையை சரி செய்த அனுபவத்தை பகிர்கின்றேன்.                      நண்பர்களே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எனது வங்கி கணக்கை  நெட் பேங்கிங் செய்வதற்காக பொது துறை வங்கிக்கு நேரில் சென்று எனது தகவல்களை கொடுத்து வந்தேன்.                               மீண்டும் 15 நாட்கள் கழித்து சென்று கேட்டபோது அந்த ஆவணங்கள் எங்கேயோ வைத்து விட்டோம் என்றும், மீண்டும் ஆவணங்கள் கேட்டார்கள்.பொறுமையாக மீண்டும் ஆவணங்களை கொடுத்து வந்தேன்.                          பிறகும்  நெட்பேங்கிங் செய்யப்படவில்லை. மீண்டும் இரண்டு, மூன்று முறை போன் செய்தோம். வங்கியில் பேசினேன். ஆனால் மீண்டும் அவர்களிடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை . நிறைவாக ஒரு ஈமெயில் அனுப்பினேன்.வங்கியின் ஈமெயில் இணையத்தில் எளிதாக எடுத்துவிட்டேன். இமெயில