விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருப்பதை மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக சிறப்பு வகுப்பு எடுக்ககூடாது என இணை இயக்குனர் தகவல்.

 Siva Tam's Tpt.   



*விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு  எடுக்க பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருப்பதை மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களின்  கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில்*


 *மாநில தலைவர் விரைவாகவும் துரிதமாகவும் செயல்பட்டு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அவர்களை சந்திக்க முயற்சித்தார் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் வெளியூர் சென்றிருப்பதால் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ( பணியாளர் தொகுதி ) அவர்களை இப்பொருள் சார்ந்து சுமார் 30 நிமிடம் விரிவாக விவாதித்து  கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டிற்கு பிறகு  இரண்டு முழு பருவங்கள் முடித்த மாணவர்களுக்கு தற்போது தான் அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விடுமுறை நாட்களில் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க வாய்மொழி உத்தரவு வழங்கியிருப்பது மாணவர்களை மேலும் உளவியல் சார்ந்து பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் பல்வேறு தலைமை ஆசிரியர்கள் இவ்வுத்தரவை வலுக்கட்டாயமாக செயல்படுத்தி ஆசிரியர்களையும் உளவியல் சார்ந்த நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். அரையாண்டு தேர்வு சிறப்பாக முடித்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குறிப்பிட்ட கால அளவு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஓய்வு தேவைப்படுவதால் அதனை கருத்தில் கொண்டு தற்போது பரவி வரும் புதிய கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும் அனைத்து வகுப்புகளும் நடைபெறாத சூழலில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது எனவே விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதிக்க கூடாது என்ற வழிமுறை அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.*


 *மேலும் இணை இயக்குனர் அவர்களும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் மதிப்பிற்குரிய திரு.கு. தியாகராஜன் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுப்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உகந்ததாக இருக்காது என்று எடுத்துரைக்கப்பட்டது ஆணையர் அவர்களும் இப்பொருள் சார்ந்து எவ்வித ஆணையும் உத்தரவும் வாய்மொழி ஆகவும் கடிதமாகவும் வெளியிடப்படவில்லை என்று கூறியதோடு அது போன்று ஏதேனும் மாவட்டங்களில் அறிவுறுத்தப்பட்டிருந்தால் அதை தனது கவனத்திற்கு கொண்டு வரும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார் மேலும் இது குறித்து விரிவாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் உரிய வழிகாட்டுதலையும் உத்தரவையும் நாளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்* 


 *மாணவர் நலனையும் ஆசிரியர் நலனையும் துரிதமாக செயல்பட்டு காத்திட்டு மாநில தலைவர் திரு.கு. தியாகராஜன் அவர்களுக்கு அனைத்து மாணவர்கள் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க பொறுப்பாளர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.* 


 *நன்றி நன்றி நன்றி*

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்