2022ஆம் ஆண்டு விருது பெற்றவர்கள்... ஓர் பார்வை...!!

 மு. சிவக்குமார், ப.ஆ TAMS TPT



2022ஆம் ஆண்டு விருது பெற்றவர்கள்... ஓர் பார்வை...!!


ஜனவரி :


வெள்ளத்தால் சேதமடையாத வீட்டை வடிவமைத்த விருதுநகரை சேர்ந்த 8 வயது சிறுமி விசாலினிக்கு பிரதமர் மோடி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது வழங்கினார்.


பிப்ரவரி :


94வது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய ஆவணப்படமான ரைட்டிங் வித் ஃபயர் முதன்முறையாக தேர்வாகி உள்ளது.


மார்ச் :


2022ஆம் ஆண்டு ஸ்போர்ட் ஸ்டார் ஏசஸ் விருது வழங்கும் விழாவில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (ஆண்) என்ற விருதினைப் பெற்றார்.


தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


மறைந்த இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.


ஏப்ரல் :


புதுவை பல்கலைக்கழகத்துக்கு மாவட்ட பசுமை சாம்பியன் விருது வழங்கி மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.


2022ஆம் ஆண்டிற்கான, சிறந்த திருநங்கை விருதை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


மே :


தமிழ் திரைப்பட நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் பாஸ்டன் சர்வதேச பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.


குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானப்படை அதிகாரி குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு பாதுகாப்புத் துறையில் வழங்கப்படும் 3வது உயரிய விருதான சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.


ஜூன் :


அமெரிக்காவில் உள்ள இந்திய உணவகம் ஒன்று, சிறந்த உணவகத்துக்கான விருதை பெற்றுள்ளது.


உணவுப் பாதுகாப்பு துறை செயல்பாடுகளில் தேசிய அளவில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மத்திய அரசு விருது கிடைத்தது.


ஜூலை :


அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக உயரிய விருதான 'சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது", 25 வயதே ஆன அமெரிக்காவின் ஒலிம்பிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டது.


தமிழ்நாடு-புதுச்சேரி மண்டலத்தில் அதிகமாக வருமான வரி செலுத்தியதற்கான விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.


ஆகஸ்ட் :


இந்தியாவிலேயே சிறந்த மலைகள் மற்றும் மலைக் காட்சிகள் (Mountain and Hill Views) இடத்திற்கான அவுட்லுக் டிராவலர் விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.


செப்டம்பர் :


பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு 2012, 2013 மற்றும் 2014 ஆகிய மூன்று வருடங்களுக்கான தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை அவரது மகன் பெற்றுக்கொண்டார்.


அக்டோபர் :


சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உலக பசுமை நகர விருதுகள் 2022 என்ற விருதை ஹைதராபாத் பெற்றுள்ளது.


நவம்பர் :


தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.


தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.


டிசம்பர் :


தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் எண்ம (டிஜிட்டல்) விருது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு முதன்முறையாக டிஜிட்டல் விருது வழங்கப்பட்டுள்ளது.


தகவல

மு.சிவக்குமார், ப.ஆ

மாவட்ட (அமை) செயலாளர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

திருப்பத்தூர் மாவட்டம்.



Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்