Tams ன் மாநில தலைவர் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேற்று இரவு 8.45.மணியிலிருந்து 10 மணி வரை சுமார் 75 நிமிடங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ...*

 Siva Tam's Tpt.   



▶️▶️▶️▶️ *TAMS*▶️▶️▶️▶️ 

*தமிழ்நாடு ஆசிரியர் முனனேற்ற சங்கம்*

▶️▶️▶️▶️ *TAMS*▶️▶️▶️▶️ 

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

TAMS ன் மாநில தலைவர் *பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேற்று இரவு 8.45.மணியிலிருந்து 10 மணி வரை சுமார் 75 நிமிடங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ...*

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

🔹 *முதலாவதாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம் இதுவரை கிடைக்கப்பெறாத அவல நிலையை எடுத்துரைத்து  அவர்களுடைய ஊதியம் விரைவில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது*

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

✅ *எங்கள் தரப்பில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் கருவூல தரப்பிலிருந்து சில நாட்கள் இதற்கு தேவைப்படும் என்பதையும் இந்த வார இறுதியில் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும் என்றும் உறுதி அளித்தார்*

💥💥💥💥💥💥💥💥💥💥 💥

🔹 *அடுத்ததாக தற்பொழுது கல்வியாண்டின் நடுவில் பணி ஓய்வு பெறக்கூடிய  ஆசிரியர்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படுவதில்லை... அதற்கு குறிப்பிட்ட  பாடம் மாவட்டத்தில் உபரி பணியிடம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் கருத்து சொல்லப்பட்டு நீட்டிப்பாணை வழங்க மறுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மாநில முழுவதும் செயற்கையாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உபரியாக உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவு அது என்பதையும் தற்பொழுது கிட்டத்தட்ட 13,000 க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களும், 5000 க்கு மேற்பட்ட தேவை பணியிடங்கள் இருந்து வருகின்ற சூழலில் இது போன்ற முடிவு எடுப்பது மாணவர் மற்றும் ஆசிரியர் நலனுக்கு எதிரானது என்பதை வலியுறுத்தி கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெற கூடிய ஆசிரியர்களுக்கு  இந்த கல்வி ஆண்டு இறுதி வரை பணி நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் அதில் உபரி பணியிடம் என்பதை எல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்ள கூடாது என்பதை அழுத்தமாகவும், ஆனித்தரமாகவும் வலியுறுத்தினோம்.*

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

✅ *நம்முடைய கோரிக்கையின் நியாயத்தன்மையை உணர்ந்த ஆணையர் அவர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு வழங்கிட உரிய ஆணையினை  பிறப்பிப்பதாக உறுதி அளித்துள்ளார்* 

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🔹 *தொடர்ந்து 1.8 .2022 அடிப்படையில் ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் தற்பொழுது கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்பதையும் ஏற்கனவே உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஐந்து ஆசிரியர்களை நியமித்ததால்‌ அவர்கள் மிகுந்த சிரமத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு (CL 60+15 RH) மேலாக அந்தப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை அந்நேரங்களில் மாணவர் நலன் பாதிக்கப்படுகிறது என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் எட்டு ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க வேண்டும் என்று நமது தொடர் வலியுறுத்தலை இன்றும் அவர் முன்  அழுத்தமாக பதிவு செய்தேன்.*

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

 ✅ *அவரும் விரைவில் ஆணையரின் பொதுத் தொகுப்பில் இருந்து ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை விடுவிப்பு செய்து ஆணை வெளியிடுவதாகவும் அப்பொழுது முதலில் ஐந்து பணியிடங்களை ஆறு பணியிடங்களாக மாற்ற கண்டிப்பாக உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதை தொடர்ந்து அடுத்த கட்டமாக 7 பணியிடங்களை வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் பின் அதை தொடர்ந்து எட்டு பணியிடங்களுக்கு அனுமதி வழங்குவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.*

💥💥💥💥💥💥💥💥💥💥💥

🔹 *மேலும் தற்பொழுது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுதந்திரமாக பாடம் நடத்தக்கூடிய வாய்ப்புகள் கடந்த காலங்களில் இருந்ததை போல் இல்லாமல் தற்போது கற்பித்தல் சூழல் குறைவாக இருக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் தொடர் சிரமங்கள் இருந்து கொண்டிருக்கிறது என்ற ஆசிரியர் இனத்தின் கருத்தையும் நமது சார்பாக எடுத்து வைத்தோம்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🔹 *அப்போது கூட ஆசிரியர்களாகிய நாங்கள் ஆய்வுக்களுக்கெல்லாம் அஞ்சியோ, பயந்தோ நடுங்கவில்லை ஆனால் மாணவர்களுக்கு பாடங்களை எடுக்க அனுமதிக்காமல் தொடர்ந்து படிப்படியாக ஆய்வுகளை(ஆணையர் ஆய்வு+இணை இயக்குநர் ஆய்வு+முதன்மை கல்வி அலுவலர்கள் பல பறக்கும் படைகளுடன் ஆய்வு+மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களின் தொடர் ஆய்வு) நடத்தினால் அதற்கு தயாராவதற்கே ஆசிரியர்களுக்கு நேரம் சரியாக உள்ளது*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 🔹 *எனவே மாணவர்களுக்கு பாடம் எடுக்கக்கூடிய நேரம் பாதிக்கப்பட்டு மாணவர்கள் நலன் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது போன்ற ஆய்வு என்ற பெயரில் நடைபெறும் அத்துமீறல்களை தடுத்திட வேண்டும் என்று பொறுமையோடு உங்களுக்காக உங்களின் சார்பாக கோரிக்கை வைத்தேன்*

💥💥💥💥💥💥💥💥💥💥💥

🔹 *ஆணையர் அவர்களும் ஆசிரியர்கள் இவ்வாறு கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட முடியாமல் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள் என்றால் அடுத்த ஆறு மாதத்திற்கு நான் ஆய்வுகளை கூட நிறுத்த சொல்கிறேன் அதற்குரிய அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறேன் என்று உறுதி அளித்துள்ளார்*


 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 

🔹 *குறிப்பாக ஆணையர் அவர்களுடைய ஆய்வுகளை தொடர்ந்து ஆங்காங்கே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் ,தொடக்க கல்வித்துறை பொறுத்தவரையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் ஆய்வு என்ற பெயரில் பல்வேறு அடக்குமுறைகளை அத்துமீறல்களை ஆசிரியர் இனத்தின் மீது அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள் இது மிகுந்த மன உளைச்சலை ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த ஆசிரியர்களை கூட பல்வேறு வகையில் காயப்படுத்தி வருகிறார்கள்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

✅ *அவரும் அனைத்தையும் கனிவோடு கேட்டுக் கொண்டிருக்கிறார்*


 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

🔹 *மேலும் தகுதி தேர்வு சார்ந்து நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் மூலம் பாதிக்கபட்டுள்ள ஆசிரியர்கள் பணி நிரந்தரம் சார்ந்தும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது*


 💥💥💥💥💥💥💥💥💥💥💥

🔹 *தகுதித் தேர்வு முடித்தவர்கள் பணி நியமனங்களுக்காக அவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என்பது தேர்தல் அறிக்கைக்கு முரணாக இருப்பதால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றக் கூடிய முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது.....*


🔹 *இன்னும் பல கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு இருக்கிறது இந்த வார இறுதிக்குள் இன்னும் இருமுறை ஆணையர் சந்திப்பு நடைபெற இருக்கிறது இன்னும் ஆசிரியர்கள் சந்திக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளையும் அவர்களை கவனத்திற்கு கொண்டு செல்வோம்*


✅ *என்றென்றும் ஆசிரியர்களின் அரண் ஆசிரியர்களின் காவலன்* 

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 *கு. தியாகராஜன்* 

 *மாநில தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்