சென்னை தலைமைச் செயலகத்தில் ஆசிரியர்கள் சார்ந்த நமது பல்வேறு கோரிக்கைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நமது மாநில தலைவர் மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்கள் நேரில் சந்தித்து வழங்கி நடவடிக்க எடுக்க கேட்டுக்கொண்டார்.

 Siva Tam's Tpt.     



*நிகழ்வு - 1*


*நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நமது பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை  நமது மாநில தலைவர் மதிப்பிற்குரிய மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்கள்  நேரில் சந்தித்தார், அதில் குறிப்பாக*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*1. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் 50% சதவீதத்தினை பதவி உயர்வு வாய்ப்பாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*2.தேர்தல் நடைபெறும் நாட்களை தவிர்த்து பிற நாட்களில் தேர்தல் பணி மற்றும் இதர பணிகளில் இருந்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாணவர் நலன் கருதி விளக்க அளிக்க வேண்டும்*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*3.ஐம்பெரும் விழாவிற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய தேதியையும் ஒப்புதலையும் அதே வேலையில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தேதியையும் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டோம்.* 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*4.அனைத்து பகுதி நேர ஆசிரியர் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு சார்பாக மாநாட்டிற்கான தேதியை வழங்கிட வேண்டும் என்ப உட்பட பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து பேசினோம் மாநில தலைவரோடு மாநில செயலாளர்( ம) மாநில பொருளாளர்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


*நிகழ்வு - 2*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதைக்குரிய தலைமை தேர்தல் ஆணையர்   சத்திய பிரதாப் சாகு அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கு.தியாகராஜன் அவர்கள் தலைமையில் நேரில் சந்தித்து தேர்தல் நடைபெறும் நாட்களை தவிர்த்து இதர நாட்களில் தேர்தல் பணிகளில் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அரை மணி நேரத்திற்கு மேலாக விவாதித்த போது ...*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 *குறிப்பாக BLO பணிகளில் இருந்து அரசு பள்ளி மாணவர் நலன் கருதி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான விலக்கு அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆசிரியர்களின் சிரமங்களை விரிவாக எடுத்துரைத்தோம். கணிவோடு கேட்டுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் மாணவர்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*விரைவில் ஆசிரியர்களுக்கு BLO பணிகளில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*என்றென்றும் ஆசிரியர் நலனில் TAMS. மாநில தலைவரின் இந்த சந்திப்பில் மாநில செயலாளர். திரு.தி. அருள்குமார் அவர்கள் மற்றும் மாநில பொருளாளர் திரு.ப.உதயகுமார் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


*நிகழ்வு - 3*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்ததன் தொடர்ச்சியாக*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படும் முதுகலை ஆசிரியர்கள் பணி இடங்களில் 50% தொடக்க கல்வித்துறையில் பணியாற்றக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பாக வழங்கிட கருத்துருவினை தமிழக அரசுக்கு அளித்திட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர்                             கு. தியாகராஜன் அவர்களின் தலைமையில் மதிப்புமிகு தொடக்க கல்வித் துறை இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*அவரும் இதற்குரிய கருத்துருவினை அரசுக்கு அனுப்பிட வழிவகை செய்வதாக உறுதியளித்துள்ளார் .*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 *மாநில தலைவருடன்  மாநில செயலாளர் மற்றும் மாநில பொருளாளர் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்*


மு.சிவக்குமார், ப.ஆ

மாவட்ட (அமை) செயலாளர்

திருப்பத்தூர்.

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்