உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உயர்த்தி கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை ஒதுக்கவும் பணி நிரவல் குறித்தும் ஆனையரிடம் மாநில தலைவர் சந்தித்து பேசினார்

 Siva Tam's Tpt.   



நேற்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை பணி நிரவல் சார்பாக சுமார் 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர்கள் நலன் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உயர்த்தி கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை ஒதுக்கவும்  அதன்படி மாணவர் ஆசிரியர் விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியும் அரசாணை எண் 176 இன் படி பணிநிரவல் பெற்ற ஆசிரியருக்கு மூன்று ஆண்டு பணி நிரவல் கலந்தாய்விலிருந்து  விலக்களிக்கப்படுவதால் அப்பள்ளியில் பணிபுரியும் மூத்த ஆசிரியர்  பணி நிரவலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை விளக்கி எடுத்துக் கூறி பணி நிரவல் மூலம் மாறுதல் பெறும் ஆசிரியர் அவர் பணி ஏற்கும்  பள்ளிக்கும் 3 ஆண்டு பணி நிரவலிருந்து விலக்கு அளிக்க கேட்கப்பட்டது ஆணையர் அவர்களும் ஆசிரியர் நலனையும் கற்றல் கற்பித்தல் பாதிப்பு ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு அது தவிர்க்கப்படும் என வாய்மொழி மூலம் உறுதி அளித்துள்ளார்


*கு.தியாகராஜன் மாநில தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜாக்டோ ஜியோ*

🖊️

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்