டாக்டர் கலைஞர் அவர்களினால் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவரப்பட்ட தேதியான 1.6. 2006 தேதியை நன்றியோடு நினைவு கூறும் வகையில் 162006 ரூபாயை இலங்கை தமிழர் நிவாரண நிதி வழங்கியது Tams 01-06.2006.

 Siva Tam's Tpt.    



டைமிங்ல இவர அடிச்சுக்க ஆளே இல்ல முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது  இலங்கை தமிழர்களுக்காக நிவாரண நிதியை வசூலித்தார். பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் அன்று அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கினார்கள் நாங்களும் ஒரு இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். ஆனால் அப்படி வழங்கினால் தனித்துவம் இருக்காது என்பதை கருத்தில் கொண்டு தொகுப்புதியத்தில்  பணியாற்றிக் கொண்டிருந்த எங்களுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களினால் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவரப்பட்ட தேதியான 1.6. 2006 தேதியை நன்றியோடு நினைவு கூறும் வகையில் 162006 ரூபாயை வழங்க முடிவெடுத்தோம். அதன் அடிப்படையில் அந்த தொகையை அவரிடம் வழங்கிட தலைமைச் செயலகத்தில் அன்றைய மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுடன் சென்றிருந்தோம். அவரோ சென்றவுடன் முத்தமிழறிஞர் அவர்களிடம் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட சுமார் 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்தை 1.6.2006 தேதியில் தாங்கள் வழங்கினீர்கள் அதை நினைவு கூறும் வகையில்  162006 ரூபாயை இவர்கள் இலங்கை தமிழர்களுக்காக நிவாரண நிதியாக வழங்குகிறார்கள் என்றார்...உடனே அடுத்த வினாடியே டைமிங்கிற்கு புகழ்போன முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்...............       இப்படி தெரிந்திருந்தால் 1 ஆம் தேதிக்கு பதிலா 30 ஆம் தேதி  காலைமுறை ஊதியம் வழங்கியிருப்பேனே என்று சொல்ல அனைவரும் சிரிப்பலையில் மூழ்கிய அரிய புகைப்படம்தான் இது...


-TAMS மாநில தலைவர் (முகநூலில் இருந்து)

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்