SSC ஆட்சேர்ப்பு 2022 - மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs), SSF, Rifleman (GD) பதவிகளில் கான்ஸ்டபிள் (GD) பணிக்கு இங்கே விண்ணப்பிக்கவும் - 24369

 Siva Tam's Tpt.   



SSC  ஆட்சேர்ப்பு 2022 - மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs), SSF, Rifleman (GD) பதவிகளில் கான்ஸ்டபிள் (GD) பணிக்கு இங்கே விண்ணப்பிக்கவும் - 24369 காலியிடங்கள் - கடைசி தேதி:  30.11.2022

பணியின் பெயர்: மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs), SSF, ரைபிள்மேன் (GD) கான்ஸ்டபிள் (GD)

மொத்த பணியிடங்கள்: 24369

தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:

NCB யில் சிப்பாய் பதவிக்கு லெவல்–1 ன் படி, ரூ.18,000 முதல் 56,900 வரை,
மற்ற எல்லாப் பதவிகளுக்கும் லெவல்-3 ன் படி, ரூ. 21,700-69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02-01-2000 க்கு முன்னதாக 01-01-2005 க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது.
இருப்பினும், உயர் வயதில் மூன்று (03) ஆண்டுகள் தளர்வு பெற்ற பிறகு, விண்ணப்பதாரர் 02-01-1997-க்கு முன்னதாக பிறந்திருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

1. கணினி அடிப்படையிலான தேர்வு

2. உடல்திறன் தேர்வு (PET), உடல்நிலைத் தேர்வு (PST), மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: மேலே உள்ள அனைத்து அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் SSC இணையதளத்தில் உள்ள https://ssc.nic.in/ என்ற இணைப்பின் மூலம் 27.10.2022 முதல் 30.11.2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ 100/-
பெண் வேட்பாளர்கள் மற்றும் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) - கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2022

SSC  2022 க்கான அறிவிப்பு  : இங்கே பதிவிறக்கவும்
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_27102022.pdf

அதிகாரப்பூர்வ தளம்: இங்கே கிளிக் செய்யவும்
https://ssc.nic.in/


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்